Sunday, February 1, 2009

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008

குளக்கோட்டு மன்னனால் திருகோணமலையில் அமைக்கப்பட்ட ஆதிகோணநாயகர் ஆலயம் கி.பி 1624 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கீசரால் அழித்தொழிப்பதற்கு முன்பு, அங்கு கடமையாற்றிய பாசுபதர் என்றழைக்கப்பட்ட பூசகர்களும் , தொழும்பாளர்களும் ,பக்தர்களும் இணைந்து இடிபட இருந்த கோயிலுக்குள் இருந்த விக்கிரகங்களை எடுத்து மண்ணில் புதைத்து வைத்தும் ,காடுகளிலும் மலைகளிலும் மறைத்துவைத்தும் வழிபாடுஇயற்றி வந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இவர்கள் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள ஸ்வாமி மலையில் ஆதிகோணநாயகரையும் ,மாதுமை அம்மையையும் வைத்து வழிபட்டு வந்தனர்.


இவ்வேளையில், கண்டியில் அரசுசெய்த ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னனின் கனவில் கோணேஸ்வரப் பெருமான் தோன்றி தாம் உறைவதற்கு ஏற்றதான கோயிலை செந்நெல் விளையும் வயல்கள் சூழ்ந்த தம்பலகாமத்தில் அமைக்குமாறு கூறி மறைந்தார்.


மன்னவன் விழித்தெழுந்து கனவில் கண்டதை தனது மதிநுட்பத்தால் கண்டறிந்து ஸ்வாமி மலையில் வைத்து வழிபட்டுவந்த ஆதிகோணநாயகரையும், மாதுமை அம்மையையும் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களையும் மேளதாளத்துடன் சிறப்புற எடுத்துவந்து கோயிற் குடியிருப்பு என்னும் இடத்தில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என திருக்கோணாசலப் புராணம் கூறுகிறது.வழமைபோலவே இம்முறையும் ஆதிகோணநாயகர் ஆலய மஹோற்சபம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.





4 comments:

Muruganandan M.K. said...

தகவல்களுக்கு நன்றி

geevanathy said...

நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

கானா பிரபா said...

தகவல்களுக்கு மிக்க நன்றி ஜீவராஜ்

geevanathy said...

நன்றி கானா பிரபா

Post a Comment