Sunday, February 1, 2009

பிராத்திப்போம்...


நம்மைப்போலவே இடப்பெயர்வு , மீள்குடியமர்வு என்று எல்லாம் கண்டவர் ஆதிகோணநாயகர். இந்த துயர் சூழ்ந்த வேளையில் அல்லல்படும் அனைத்து மக்களின் விடிவுக்காகவும் பிராத்திப்போம்..
வருகைக்கு நன்றி...
.
தொடர்புடைய பதிவு

2 comments:

Anonymous said...

தம்பைநகர். தயவுசெய்து பெயர்களை உருமாற்ற வேண்டாம். நான் அறிந்தவரையில் தம்பலகாமம் என்பதைக் குறிப்பிடுவதில் யாரும் வெட்கப்படுவதில்லை.மிகவும் புகழ்வாய்ந்த ஆதிக் கிராமம். மிக‌ப் ப‌ழைய‌ ஆங்கில‌ வ‌ர‌லாற்று நூல்க‌ளில் அந்த‌ப் பெய‌ர் உள்ள‌து.
சிங்களவர் ஒரு பக்கத்தில் பெயர் மாற்றம் செய்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அந்த வேலையில் இறங்குவது கண்டிக்கத்தக்கது. பழைய‌ பெயர்களைக் காப்பாற்றுங்கள். தொல்லியல் படங்களில் உள்ள பெயரை உருமாற்றம் செய்வதால் நமது இடங்களை எதிர்கால்ச் சந்ததியினர் அடையாளங் காணமுடியாமற் போய்விடும்.

ஒரு ஈழத் தமிழன்

geevanathy said...

வணக்கம்
வாருங்கள் பெயரிலி...

உங்கள்கருத்துக்களுக்கு நன்றி,இருந்தும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது...

1.ஒருபெயர் சம்மந்தமான பிரச்சனையை எழுப்பவிளைந்த நீங்கள் பெயரிலியாக வந்திருக்கிறீர்கள்...கருத்துத்தான் முக்கியமென வாதிடவும் முடியாது..மேலுள்ள உங்கள் வாதமும் அதில் அடிபட்டுப்போய்விடும்...

2///.....தம்பலகாமம் என்பதைக் குறிப்பிடுவதில் யாரும் வெட்கப்படுவதில்லை...///

இத்தனை வருடமாக சொந்தவூர் தம்பலகாமம் என சொல்லியும் ,எழுதியும் வருகிறேன்...சொந்தவூர்பெயரை உச்சரிப்பதில் என்ன வெட்கத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை...

3.///சிங்களவர் ஒரு பக்கத்தில் பெயர் மாற்றம் செய்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அந்த வேலையில் இறங்குவது கண்டிக்கத்தக்கது.////

உங்கள் தமிழுணர்வுக்கு அப்பால் வார்த்தைகளில் அவசரம் கொட்டிக்கிடக்கிறது...

4.///மிக‌ப் ப‌ழைய‌ ஆங்கில‌ வ‌ர‌லாற்று நூல்க‌ளில் அந்த‌ப் பெய‌ர் உள்ள‌து.///

நீங்கள் சொல்லும் ஆங்கிலவரலாறு தாண்டியும் எங்கள் ஊரின் வரலாறு இருக்கிறது..பெரும்பாலான வரலாற்று ஆவணங்களை இதுவரை சேகரித்துள்ளோம், புகைப்படங்களும்கூட வரும்நாட்களில் அவைவலையேற்றப்படும்.முடிந்தால் நீங்களும் உதவலாம்...

5.முடிந்தால் 'திரிகோணாசல புராணம்'{கி.பி 17 ம் நூற்றாண்டு நூல் என நம்பப்படுகிறது..}
20ம் அத்தியாயம் 'தம்பை நகர்ப்படலம்' எடுத்துவாசியுங்கள்..{37ம் பாடல்}

'கன்னல் வேலி வரம்பு உடுத்த
கழனி சூழும் தம்பை நகர்
என்னும் நாட்டின் அன்பினோடும்
இலங்குமணிப் பொன் ஆலயம்
..............................'
இன்னுமின்னும் இனிக்கும் வரிகள் நிறைய...

முழுவிபரங்கள் விரைவில்

Post a Comment