Tuesday, March 17, 2009

தூது பேசுதல் வீடியோ

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008



தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபத்தில் 18 ம் திருவிழாவில் இடம் பெறும் திருச்சூரகவேட்டைத் திருவிழாவினைத் தொடர்ந்து இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே ஏற்படும் பிணக்கினை மையப்படுத்தியே இந்த தூது பேசுதல் நிகழ்வு இடம் பெறுகிறது...


திருச்சூரக வேட்டைத்திருவிழா




திருச்சூரக வேட்டைத்திருவிழாவிற்குப் போய்வந்த இறையனார் ஆலயத்துள் வர இறைவியிடம் அனுமதி கேட்கும் நிகழ்வு - ஆதிகோணநாயகர் சார்பாக தூது அனுப்பப்படுகிறது








இறைவி சார்பாக பதிலளிக்கப்படுகிறது



இருவருக்கும் இடையில் சமரசம் எற்பட்ட பின் இப்பிணைக்கின் சூத்திரதாரியாக கருதப்படும் தொழும்பாளர் கைதுசெய்யப்பட்டு ஆழைத்துச்செல்லப்படுகிறார்..




தொடர்புடைய பதிவு

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 வீடியோ

ஆரத்தி எடுக்கும் பெண்தொழும்பாளர்..

உள்வீதி வலம் வருதல்

கதிர்காம சுவாமி எழுந்தருளும் காட்சி





10 comments:

Anonymous said...

அடடா இந்த இருட்டினிலும் இப்பவும் இப்படியான நிகச்சிகள் நடக்கின்றனவா..?

நன்றி ஜீவா..

இருட்டிற்குப் பயப்பிடவில்லை..ஆனால் அங்கு
இருக்கும்..சூழ்நிலைகளை எண்ணி ஆச்சரியப்பட்டேன்..

தூது பேசுதல் நிகழ்ச்சி நன்றாகயிருந்தது..
கைது செய்து கொண்டு போகும் காட்சிக்குப்பின்பு அவருக்கு என்ன நடக்கும்...? ஜீவா..?

geevanathy said...

நன்றி

இந்நிகழ்வு 2008 இன் நடுப்பகுதியில் இடம்பெற்றது.அப்போது இவ்வளவு நிலமை இறுக்கமில்லை.. இருந்தும் சில துயரமான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்தன திருவிழா காலத்திலேயே, கோயில் அருகிலேயே....
என்ன செய்வது நிட்யசமற்ற வாழ்வுக்குப் பழகிப்போய்விட்டோம் நாங்கள்...
இதனை பதிவு செய்யும் போது இணையத்துடன் நெருங்கிய தொடர்பில்லை ..கிடைத்த கமராவைக்கொண்டு பதிவு செய்திருந்தேன்...இப்போது என் வேலைத்தளம் முழுவதையும் யுத்தத்தின் கோரம் நிறைத்திருக்கிறது.. அதனால் மனத்தாலும்,உடலாலும் நிறைய சோர்ந்து போனதுபோல் இருக்கிறது... எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவற்றை வலையேற்றி வருகிறேன்....



கைது செய்து கொண்டு போகும் காட்சிக்குப்பின்பு அவருக்கு என்ன நடக்கும்...?

அவரைக்கட்டி வைத்து அடிப்பதாகச் சொல்வார்கள்.. ஒலி பெருக்கியில் 3 முறை அடிக்கும் சத்தம் கேட்கும்..சிறுவயதில் உண்மையாகத்தான் அடிக்கிறார்களா? என்றறிய பலமுறை முயற்சித்தும் அறிய முடியாமல் போனது ஞாபகம் இருக்கிறது...


இவ்விழா தொடர்பான பல சுவாரிசயமான தகவல்களை அப்பப்பா { தம்பலகாமம் க. வேலாயுதம் } எழுதி வைத்திருந்தார்...நேரம் கிடைக்கையில் வலையேற்றுவேன்.....

Anonymous said...

intresting

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பதிவு ,படங்களுக்கு மிக்க நன்றி!

geevanathy said...

நன்றி Anonymous

geevanathy said...

நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன் தூது பேசுதல் என்ற இந்தத் திருவிழாவின் விளக்கம் என்ன?? என்று கேட்டதற்கு இப்போதுதான் வி்டைபகிர முடிந்தது.. நன்றி

Anonymous said...

நன்றிகள். இன்னமும் இத்தகைய திருவிழாக்கள் நடைபெறுவது மகிழ்வுதான்.

சாந்தி

geevanathy said...

நன்றி சாந்தி அவர்களே

Anonymous said...

அடிப்பார்களா!
பாவம் அவர்கள்!
அன்று போல் இன்றும் நடக்கிறதா!

geevanathy said...

இந்நிகழ்வு பழமையில் நடந்த புராணவரலாற்றை மீள ஞாபகப்படுத்தும் நிகழ்வு..நாடகம் போலவே இடம்பெறும்...

அடிப்பார்களா! - பாவனைசெய்தல்

Post a Comment